தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கொடியோர் நல்கார் ஆயினும்


கொடியோர் நல்கார் ஆயினும்

367. மருதம்
கொடியோர் நல்கார்ஆயினும், யாழ நின்
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்,
உவக்காண்-தோழி!-அவ் வந்திசினே-
தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப்
பூசல் ஆயம் புகன்று இழி அருவி
மண்ணுறு மணியின் தோன்றும்
தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே.
வரைவு உணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீதூராமை உணர்த்தியது;வரைவு நீட்டித்த இடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றும் வகையான் ஆற்றுவித்ததூஉம் ஆம். - மதுரை மருதன் இளநாகன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:51:40(இந்திய நேரம்)