தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தேற்றாம் அன்றே


தேற்றாம் அன்றே

398. பாலை
தேற்றாம் அன்றே-தோழி! தண்ணெனத்
தூற்றும் திவலைத் துயர் கூர் காலை,
கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர்
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை,
அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு,
மெய்ம் மலி உவகையின் எழுதரு
கண் கலிழ் உகுபனி அரக்குவோரே.
பிரிவுணர்த்திய தோழி, 'பிறர் தலைமகன் பிரிந்து வினைமுற்றி வரும் துணையும் ஆற்றியுளராவர்' என்று, உலகியல் மேல் வைத்து உரைத்தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. - பாலை ப

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:57:07(இந்திய நேரம்)