தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பூவொடு புரையும் கண்ணும்


பூவொடு புரையும் கண்ணும்

226. நெய்தல்
பூவொடு புரையும் கண்ணும், வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும்
நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக்
குருகு என மலரும் பெருந் துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:04:21(இந்திய நேரம்)