தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொன்நேர் ஆவிரைப்


பொன்நேர் ஆவிரைப்

173. குறிஞ்சி
பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பல் நூல் மாலைப் பனைப் படு கலி மாப்
பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு,
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப,
'இன்னள் செய்தது இது' என, முன் நின்று,
அவள் பழி நுவலும், இவ் ஊர்;
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளேனே.
குறை மறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது. - மதுரைக் காஞ்சிப் புலவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:06:17(இந்திய நேரம்)