'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி உடன்படாது கூறியது. 7
258
குன்றக் குறவன் காதல் மட மகள்
அணி மயில் அன்ன அசை நடைக் கொடிச்சியைப்
பெரு வரை நாடன் வரையும் ஆயின்,
கொடுத்தனெம் ஆயினோ நன்றே
5
இன்னும் ஆனாது, நன்னுதல் துயரே.
வரைவு வேண்டிவிட மறுத்துழித் தமர்க்கு உரைப்பாளாய், வரையாது வந்தொழுகும் தலைமகற்குத் தோழி, அவன் மலை காண்டலே பற்றாகத் தாங்கள் உயிர் வாழ்கின்றமை தோன்றச் சொல்லியது. 8