தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தழங்குரல் முரசம் காலை

தழங்குரல் முரசம் காலை

448
தழங்குரல் முரசம் காலை இயம்ப,
கடுஞ் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே;
மெல் அவல் மருங்கின் முல்லை பூப்பப்
பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்றே;
5
அம் சில் ஓதியை உள்ளுதொறும்,
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே.
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் பருவம் வந்த இடத்தினும் மீளப் பெறாது, அரசன் செய்தியும், பருவத்தின் செய்தியும், தன் செய்தியும், கூறி ஆற்றானாயது. 8

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 11:04:19(இந்திய நேரம்)