தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன் அமர் ஆயமொடு

தன் அமர் ஆயமொடு

379
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின்
இனிது ஆம்கொல்லோ தனக்கே பனி வரை
இனக் களிறு வழங்கும் சோலை
வயக்குறு வெள் வேலவற் புணர்ந்து செலவே?
புணர்ந்து உடன்போகியவழி, தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட நற்றாய், 'அதனை முன்னே அறிவித்து, நாம் மணம் புணர்த்த ஒழுகாது போயினள்' என நொந்து சொல்லியது. 9

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 11:04:35(இந்திய நேரம்)