Primary tabs
வையையில் பெருவெள்ளம்
புதுப் புனலாட முற்படும் மகளிரது செயல்
வையையின் கரை உடைதலும், ஊரார் கிளர்ந்து
எழுதலும்
மைந்தரும் மகளிரும் நீராடச் செல்லல்
ஆற்றினது நீரோட்டம்
அந்தணர்கள் கொண்ட கலக்கம்
பிறரும் சேறு கலந்த புனல் கண்டு நீங்குதல்
இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன் காதற்பரத்தைக்கு
வையை நீர் விழவு கூறியது
காதற்பரத்தையின் வினாவும் தலைமகன் மறுமொழியும்
களவு வெளிப்பட்டது எனக் காதற்பரத்தை
உரைத்தல்
தளிரின் துவட்சிக்கு வையைப் பெருக்குக் காரணம்
என
தலைவன் உரையை 'உண்மை அன்று' என, அவள் மறுத்து
உரைத்தல்
தலைமகன் மேலும் கூறுதல்
காதற் பரத்தை கூற்று
தலைமகன் பின்னும் சூளுற்று உரைத்தமை
விறலிக்குத் தலைமகள் கூறுதல்
'வையை நீர் விழவணியில் காதற்பரத்தை,
"இற்பரத்தையுடன் நீராடினான் தலைமகன்' எனக் கேட்டுப்
புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்' எனக்
கேட்டதலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ் வையை
நீர் விழவணியும், ஆங்குப் பட்ட செய்தியும் கூறி,
வாயில் மறுத்தது.
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்
வையைப் புனலின் வருகை
புனலின் செயல்
வெள்ளப் பெருக்கைக் கண்ட மக்களின் செயல்
வையைப் புனலின் வனப்பு
தோழி புனலணி இன்பம் கூறுதல்
தோழி தலைமகன் காதன்மை கூறுதல்
தோழி வையையின் நீரணியின்பம் குறித்துக்
கூறுதல்
தலைமகன் தலைமகளோடு புனல் ஆடினான் எனக் கேட்டு
இன்புற்ற செவிலித்தாய்,தோழியை, 'நீங்கள் ஆடிய
புனலணி இன்பம் கூறுக' என்றாட்கு, அப் புனலணி இன்ப
மும், பல்வேறு வகைப்பட்ட இன்பமும், தலைமகன்
காதன்மையும், கூறி, 'என்றும் இந்த நீரணி இன்பம்
பெறுக, யாம்' என்றது.
மையோடக் கோவனார் பாட்டு
பித்தாமத்தர் இசை
பண்ணுப் பாலையாழ்
வையையில் நீர் வருகை
புனலாடும் பொருட்டு மகளிர் வையைக் கரை சேர்தல்
கரை சேர்ந்த மகளிர் செயல்
அலர்வாய் அவிழ்ந்தன்ன பருவத்தையுடைய கற்புடைமகளிர்,
பரத்தையர் இவர்களின் செயல்
முகைப் பருவத்து மகளிரின் செயல்கள்
களிறு, பிடிகளின் ஒத்த அன்பு
மகளிர், மைந்தர் இவர்கள் செயல்
மகளிரது நீர் விளையாட்டு
புனல் விளையாட்டால் மெலியாத மைந்தர் செயல்
புனலாடி மீண்டவாறு
வையையை வாழ்த்துதல்
பருவம் கண்டு வன்புறை எதிர் அழிந்த தலைமகளது
ஆற்றாமை கண்டு, தோழி தூது விட, சென்ற பாணன்,
பாசறைக்கண், தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர்
விழவு அணியும், ஆங்குப் பட்ட செய்தியும்,
கூறியது.
கரும்பிள்ளைப் பூதனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்
மழை பொழிய வையையின் நீர் பெருகி ஓடுதல்
தோழி திருமருதத் துறையின் சிறப்புக் கூறுதல்
கண்டார் கூற்று
வையை போர்க்களத்தை ஒத்தல்
இளவேனிற் காலத்து ஆடல்
தைந் நீராடல்
மகளிர் செயல்கள்
மகளிர் கருத்தும், வேண்டிக்கோடலும்
ஒருவன் உவந்தவை காட்டுதல்
தலைமகன் கேட்ப, தோழி வையையை நோக்கிக் கூறுதல்
வரைவு மலிந்த தோழி, 'கன்னிப் பருவத்துத் தைந்
நீராடத் தவம் தலைப்பட் டேம்' என வையையை நோக்கி,
தலைமகன் கேட்ப, சொல்லியது.
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்
வையையில் கடல்போல் நீர் பெருகி வருதல்
புனல் வரவு காண மகளிர் சென்ற வகை
நீர் வரவு காணச் சென்ற மைந்தர் செயல்
கண்டவர் காண வருவார்க்கு அங்கே தாம் கண்டவற்றைக்
கூறல்
கூடினோர் மொழிகள் முற்றும் கேட்கப்படாமைக்குக்
காரணம் உரைத்தல்
கேட்டன கூறல்
கண்டவர் காண வருவார்க்கு உவந்தவற்றைக் காட்டல்
நீர்விழவின் சிறப்பு
வையையை வாழ்த்துதல்
கார்ப் பருவத்து வையை நீர் விழவணியில் பல் வேறு
வகைப்பட்ட இன்பம் கூறி, 'இவ் வகைப்பட்ட இன்பத்தை
உடைய நின்னையும் நினைத்திலர்' என,வையையை நோக்கி,
தலைமகன் கேட்ப, தோழி இயற்பழித்தது.
நல்வழுதியார் பாட்டு
நந்நாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்
வையையில் நீர் வரவு
தலைவன் காதற் பரத்தையுடன் கூடி மகிழ, வையையின் வரவு
வாய்த்தல்
வையை வானக் கங்கையை ஒத்து விளங்குதல்
வையைக்கு உரிய இயல்பு
தோழி வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயில்
மறுத்தல்
காதற் பரத்தையுடன் புனல் ஆடிய தலைமகன் தோழியை
வாயில் வேண்ட,அவள் புனல் ஆடியவாறு கூறி, வாயில்
மறுத்தது.
நல்லழிசியார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்
புதுப் புனலையும் பல வகை மணங்களையும் உடன்கொண்டு
வையை வருதல்
புதுப் புனலாட வைகறையில் மைந்தரும் மகளிரும் சென்ற
வகை
தலைமகனது காதற்பரத்தையைத் தோழியர் கண்ட காலத்து
நேர்ந்த நிகழ்ச்சி
தலைமகனது முகமாற்றமும், கூட்டத்துள் பரத்தை
மறைதலும்
தன்னைத் தொடர்ந்த ஆயத்தாரோடு பரத்தை உரைத்தல்
தலைமகளின் திகைப்பு
ஆயத்தார் பரத்தையை நோக்கி வைது உரைத்தல்
பரத்தை ஏசுதலைக் கண்ட முதுமகளிர் கூற்று
பரத்தையின் பதில் உரை
தலைவி கூற்று
பரத்தையின் மறுமொழி
கண்டார் சிலருடைய கூற்று
பரத்தையை நோக்கி உரைத்தல்
தலைமகளுக்கு முனிவு நீங்க உரைத்தல்
வையை நீர் மலர்களுடன் வந்து கூடல் மதிலின் சுருங்கை
வழியே பாயும் காட்சி
பிரிந்தாரைக் கூட்டுவித்தல் வையைக்கு இயல்பு
பருவ வரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு, தூது
விடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப் பருவமும்
வையை நீர் விழவணியும் கூறியது.
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்
மழை பெய்தலும் நீர்ப் பெருக்கும்
மைந்தரும் மகளிரும் கரையையும் வையையையும் சேர்கின்ற
அழகு
திருமருத முன்துறைக் காட்சிகள்
வையையில் புனல் விரைந்து வருதல்
புதுப் புனலை விரும்பி மக்கள் கோலம் கொண்டு
செல்லுதல்
வையைத் துறையில் மன்னனும் மக்களும் கூடுதல்
நீராடற் காட்சிகள்
தலைவன் பரத்தைமையைத் தோழி குறிப்பால்
உணர்த்துதல்
குலமகளிர் உரிமை மைந்தரோடு நீராடுதல்
தலைவன் கூற்று
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
வையை நுரை முதலியவற்றோடு பெருகிச் சென்ற வகை
திருமருத முன்துறை
சாந்து, பூ, முதலியவற்றால் நீர் வேறுபடுதல்
பாண்டியன் கூடலாரொடு வையை நீராடிய மாட்சி
இப் பாடல், தொல்காப்பியம்,
செய்யுள் இயல், சூ. 118 இளம்பூரணர் உரையில்
கண்டது.
இப் பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 121,
பேராசிரியர்,
நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது. இப் பகுதி
'அறவோர் உள்ளார்' என்று தொடங்கும் பரிபாடலின்
இறுதி என்று தெரிய வருகின்றது.
தி 4. வையை
இப் பகுதி திருக்குறள் (23) பரிமேலழகர்
உரையைப் பற்றிய 'நுண் பொருள் மாலை' யால்
தெரிய வருகின்றது.