தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal


மூலத்திலும் உரையிலும் கண்ட ஆபரண வகை, ஆயுத வகை, உடைவகை, உணவுவகை, சாதிவகை முதலியவற்றைப் பற்றிய குறிப்பொன்றை எந்தையாரவர்கள் எழுதிவைத்திருந்தார்கள். இப்போது அது 'இந்நூலாலும் உரையாலும் தெரிந்த விசேடச் செய்திகள்' என்ற பகுதியில் அமைக்கப் பெற்றுள்ளது.

எந்தையாரவர்களுடைய உருவச்சிலை, சென்னை இராசதானிக் கல்லூரியில் நிறுவப் பெறும் இச்சமயத்தில் இப்பதிப்பை வெளியிடக் கிடத்ததை என் பெரும்பேறாகக் கருதுகிறேன்.

இப்பதிப்பு அச்சாகி வருகையில் ஒப்பு நோக்குதல் முதலிய உதவிகளைச் செய்த திருவல்லிக்கேணி, தேசீயப் பெண்கள் உயர்தரக் கலாசாலைத் தமிழாசிரியர் ம-ள-ள-ஸ்ரீ வித்துவான் அ. வைத்தியநாதையரவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன்.

இதிற் காணும் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும்படி அறிஞர்களை வேண்டுகிறேன்.

'தியாகராஜ விலாசம்'
திருவேட்டீசுவரன் பேட்டை,
சென்னை, 6-3-1948

இங்ஙனம்,
S. கலியாணசுந்தரையர்


_ _ _

பதிப்பாளர் குறிப்பு

இறைவன் திருவருளால் இப்பொழுது ஐந்தாம் பதிப்பு டாக்டர் ஐயரவர்கள் நூல் நிலைய வெளியீடாகப் பிரசுரமாகிறது.

வித்துவான் வி. மு. சுப்பிரமணிய ஐயரவர்கள், M.A., அனுப்பிய சில குறிப்புக்கள் இதில் சேர்ந்துள்ளன.

சென்னை - 41.
10-3-1980
டாக்டர் ஐயரவர்கள்
நூல் நிலையத்தார்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:46:36(இந்திய நேரம்)