Primary tabs
மரவகை முதலியன:- அகரு (அகில்), அசோகு (பிண்டி), ஆல், இலவம், இறலி, ஏழிலைப்பாலை, கடம்பு, கரும்பு, கவிர், குருக்கத்தி, சுரபுன்னை, செயலை, ஞெமை, தேவதாரம், நாகமரம், பனை, பாதிரி, மகிழமரம், மராமரம், மூங்கில், வஞ்சி, வெண்கடம்பு, வேங்கை.
மலர்வகை:- அசோகம்பூ, அதிரல், ஆம்பல், இருவேரி, எருவை, கணவிரி, கல்லாரம், கழுநீர்மலர், காந்தட்குலை, காந்தள், காயாம்பூ, குல்லை, குவளை, குவளைத்தண்டு, குளிரி - கல்லாரப்பூ, கொட்டை (தாமரை), கோங்கு, சினைப்பூ. ஞாழல், தாமரை, தும்பை, துழாய், தோன்றிச் செம்பூ, நரந்தப்புல், நறவம்பூ, நாவற்பூ, நீலமலர், நெய்தற்பூ, பச்சிலை, பூதர் அருச்சனைப்பூ, மல்லிகை மாலையில் நெய்தல், மாலை மலர்பூ, மௌவல், வெட்சி.
வாத்தியவகை:- எழுதுளை வங்கியம், ஐந்துளை வங்கியம், கலப்பை, கிணை, கிம்புரி, (மடற்கிம்புரி), குழல் (வங்கியம்) தடாரி, தண்ணுமை, துடி, பறை, பெரும்பறை, மணமுரசு, முரசு, முழவு.
விலங்குகள்:- ஆண்பன்றி, எருது, களிற்றைக் கண்டு பிடிமயங்கல், குதிரை, கூங்கை மதமா, கேழல், கைம்மான், படுமணியானை, பன்றி, பாண்டி (நாரை எருது), பிடி, பிடியைக்கண்டு களிறு மாலுறல், புலி, புள்ளியன்மா, மணியணி வேசரி, யானையும் கோழியும் விலங்கும் ஒத்த அன்பினவாதல், வெள்யாடு.
வெறியாட்டு:- தம் கேளிர் வருவதற்கு மகளிர் முருகனைப் பரவுதல், பிரதிமை பூசை, வெறிப்பாட்டு, வெறியாட்டு, வேள்வி.
வையை சம்பந்தமானவை:- ஆற்றிடைக்குறை, ஆறு மலர் போர்த்து வருதல், ஊற்றுநீர், கருவயிறுறுகென மகளிர் வையையை வேண்டல், கழுநீர், கையுறை, செவ்வணி, தடங்கள், தடாகம், தணிபுனல், தமிழ் வையை, திருமருத முன்றுறை, தைந் நீராடல், நீர் விழவணி யின்பம், பிணை மரச்சட்டம், பெருவாரி, மலர்த்துறை.