Primary tabs
எனவும்,ஆடை யசைய அணியசையத் தான் அசையும்
வாடை உளர் கொம்பர் போன்ம்"
"வாளி புரள்பவை போலும் துடிச்சீர்க்குத்
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண்"
எனவும் வரும் இன்னோரன்ன பகுதிகளானே அக்காலத்தே கூத்துக்கலை நுண்ணிதாய்ச் சிறந்திருந்தமையும் உணரப்படும்.
இங்ஙனமாக இப் பரிபாடல் பல்வேறு துறைகளினும் ஓதுவார்க்கு இன்பந்தருமியல்பிற்று.
இங்ஙனம்:
பொ. வே. சோமசுந்தரன்.
உரையாசிரியன்.