தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal


"என்றூழ் உறவரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படு வோரும்
இரதி இவள் காமன் இவன் எனாஅ
விரதியர் வினவ வினா இறுப்போரும்
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக் கல்லுரு
ஒன்றிய படியிதென் றுரைசெய் வோரும்
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்
துன்னுநர் சுட்டவும் சுட்டறி வுறுத்தவும்"

என வருதல் காண்க.

இனி,

"தெய்வப் பிரமம் செய்கு வோரும்
கைவைத் திமிர்புகுழல் காண்கு வோரும்
யாழின் இளிகுரல் சமங்கொள் வோரும்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கூர நாண்குரல் கொம்மென ஒலிப்ப
ஊழுற முரசின் ஒலிசெய் வோரும்"

எனவும்,

"ஒருதிறம், பாணர் யாழின் தீங்குரல் எழ
ஒருதிறம், யாணர் வண்டின் இமிர் இசையெழ
ஒருதிறம், கண்ணார் குழலின் கரைபெழ
ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை யூத
ஒருதிறம், மண்ணார் முழவின் இசையெழ
ஒருதிறம், அண்ணல் நெடுவரை அருவிநீர் ததும்ப"

எனவும் வரும் இன்னோரன்ன பகுதிகளானே அக்காலத்தே இசைக்கலை சிறந்திருந்தமையும்,

"சுடுபொன் ஞெகிழத்து முத்தரி சென்றார்ப்பத்
துடியின் அடிபெயர்த்துத் தோள் அசைத்துத் தூக்கி
அடுநறா மகிழ்தட்ப ஆடுவாள்"

எனவும்,

"மணிமருள் தேன்மகிழ் தட்ப வொல்கிப்
பிணிநெகிழப் பைந்துகில் நோக்கஞ் சிவப்பூரப்
பூங்கொடி போல நுடங்குவாள் ஆங்குத்தன்
சீர்தகு கேள்வன் உருட்டுந் துடிச்சீராற்
கோடணிந்த முத்தாரம் ஒல்க ஒசிபவள் ஏர்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:58:28(இந்திய நேரம்)