தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal


பழைய உரைகளில் மேற்கோளாகப் பயின்ற இரண்டு முழுப்
பாடல்களும் சில உறுப்புக்களும் உள்ளன.
 
இனி, நமக்குக் கிடைத்துள்ள பாடல்களிலேதிருமால் மேலனவும்
செவ்வேள் மேலனவும் ஆகிய 14 பாடல்கள் கடவுள் வாழ்த்து என்னும்
துறைபற்றியே உள்ளன. வையையைப் பாடியபாடல் எட்டு. இனி, இப்
பரிபாடல்களில் பாண்டிய நாட்டகத்தனவாகிய திருப்பதிகளும் யாறுமே
பாடப்பட்டிருத்தல் நமது சிந்தனையை ஆராய்ச்சியில் தூண்டுகின்றது.
என்னை?
 
வடவேங்கடந் தென்குமரியாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்துள்
வைத்து மதுரையையும், அதன் அணித்தாகிய திருப்பதியையும்,
யாற்றையுமே இப் பரிபாடல் கூறுவனவாக எஞ்சிய இருமுடிவேந்தர்
நாட்டிலுள்ள திருப்பதிகளும் யாறுகளும் இப் பரிபாடல் பெறாமைக்குக்
காரணம் யாது?
 
இனி, எழுபது என்று தொகை கூறப்பட்ட பாடலனைத்தும் பாண்டிய
நாட்டிற்கே உரியன என்றே ஊகிக்க இடனுளது, இது கொண்டு ஆராயின்,
 
ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தேயிருந்த பரிபாடல்கள் அனைத்தும்
அகப்பொருள் பற்றி எழுந்தனவே என்றும், பிற்காலத்தே
பழம்பனுவல்களைச் சான்றோர் திரட்டித் தொகை செய்த காலத்திலேயே
அப் பழம்பாடல்கள் அவர்கட்கு அகப்படா தொழிந்தன என்றும்,
ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னரே பரிபாடல்
இசைப்பாடல்களாகவும் கடவுள் வாழ்த்துப் பாடல்களாகவும்
கையாளப்பட்டன என்றும், தொகைநூல் தொகுத்த காலத்தில் மதுரையினும்
அதன் அண்மையினும் வாழ்ந்திருந்த இசைப் புலவரிடமிருந்து அரிதிற்
கிடைத்த எழுபது பாடல்கள் மட்டுமே அச் சான்றோர்களாலே தொகுத்து
வைக்கப்பட்டன என்றும் நினைத்தற்கு இடன் உண்டு.
 
இனி, காமம் ஒன்றேபற்றி வரும் எனத் தொல்காப்பியரானே
உணர்த்தப்பட்ட இப் பரிபாடல், அவ்வுரிப் பொருளினும் சிறந்ததாகக்
கடவுள் வாழ்த்தினைத் தழுவிக்கொண்ட காலத்திலே தான், தமிழகத்தே
ஒரு புத்துணர்ச்சி தோன்றி மக்களைப் பெரிதும் ஆட்கொண்டதென
அறிகின்றோம். அவ் வுணர்ச்சியாவது: பண்டைக் காலத்துச் செந்தமிழ்ப்
புலவர் அறம் பொருள் இன்பம் என்னும் பொருள் பற்றியே பெரிதும்
பாடுதலன்றித் தனியே இறைவனைப் பாடி ஏத்தும் வழக்கம் பெரிதும் உடைய

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:59:30(இந்திய நேரம்)