Primary tabs
இலக்கணம் கூறுங்கால் அது நால்வகைப் பாவினுள் வெண்பாயாப்பிற்று
என்றும், மேலும் அஃது ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி மருட்பா
என்றோதப்பட்ட எல்லாப் பாவினுடைய உறுப்புக்களையும் பெற்றுப்
பொதுவாய் நிற்கும் என்றும், மேலும் கொச்சகம் அராகம் சுரிதகம்
எருத்து சொற்சீரடி முடுகியலடி என்னும் கலிப்பா உறுப்புக்களும்
அதன்கண் வரும் என்றும், அப் பாடல் காமப் பொருள் பற்றியே வரும்
என்றும் பாரித்துக் கூறியுள்ளார்.
இசையுரிமையுடைத்தாதல் உணரலாம். இக் காரணத்தானே இப் பரிபாடல்
இசைவாணர்களாலே பண்வகுத்துப் பாடப்படுவதும் ஆயிற்று.
விருந்த பரிபாடல் முழுதும் காமப் பொருள் பற்றியே எழுந்தன என்பது,
அவர் பொருள் உரிமை கூறுமிடத்துக் காமம் ஒன்றனையே விதந்தெடுத்
தோதுதலால் உணரலாம். இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள பரிபாடலிற்
பெரும்பகுதி கடவுள்வாழ்த்து என்னும் புறத்துறைபற்றிய பாடல்களே
யாதல் காணலாம். இக் கடவுள்வாழ்த்துப் பரிபாடலுக்குப்
புறனடையாகவேனும் தொல்காப்பியராலே கூறப்பட்டிலது. ஆனால்,
உரையாசிரியர்கள் இக் கடவுள் வாழ்த்து பரிபாடற்கண் வருதலை
இலேசானே தழுவுகின்றனர்.
கூறப்படுகின்றது. இதனை,
தொருபாட்டுக் காடுகாட்கு ஒன்று - மருவினிய
வையைஇரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடல் திறம்"
நூற்பா வுரையினும் தொல்காப்பியச் செய்யுளியல் 149 ஆம் நூற்பாவிற்கு
இளம்பூரண அடிகளார் செய்த உரையினும் நூற்றைம்பது கலியும் எழுபது
பரிபாடலும் என வருதலானும் உணரலாம். அழிந்தொழிந்தன போக
எஞ்சியனவாக இற்றைநாள் நம் கைக்கு எட்டியவை இருபத்திரண்டு
பாடல்களே யாகும்.