நீயாநினைவ - அன்பரது விடாத
நினைவிலிருப்பவனே
நீயே வரம்பிற்று - நின்னையே
எல்லையாகவுடைத்து
நீரெக்கி - சிவிறி; துருத்தி
நுடங்கழல் - வளைந்தெரியு நெருப்பு
நெடுநிரை - நீண்ட அணிவகுப்பு
நெற்றி இமையா நாட்டம் - சிவபெருமான்
நெற்றிவிழியா - நெற்றிக்கண்ணாக
நைவளம் - நட்டபாடை என்னும் ஒரு பண்
நொய்ந்நூல் - நுணுகிய நூல்
பசும்பிடி - பச்சிலை என்னுமொரு செடி
பசும்பூணவை - பொன்னிறத்தவை
பஞ்சவன் - பாண்டியன் (ப-தி)
படிநிலை - படிபோல
ஒன்றற்கொன்றுயர்ந்த நிலை
பண்டெல்லாம் - முன்பெல்லாம்
பண்புறுகழறல் - அறத்தொடு
பொருந்திய உறுதிச்சொல்
பதிவதமாதர் - பத்தினிப் பெண்டிர்