பதின்மரும் இருவரும் - பன்னிரண்டாதித்தரும்
பதுமத்துப்பாயல் - தாமரைப்பூப் பாயல்
பந்து - ஒரு விளையாட்டுக்கருவி
பயந்த ஞான்றே - பெற்றபொழுதே
பரவுதும் - வேண்டிக்கொள்வேம்
பரிபாடல் - ஒருவகைப் பாடல்
பரிப்புரவி - செலவினையுடைய குதிரை
பருக்கோட்டியாழ் - பரிய தண்டினையுடைய யாழ்
பலர்புகழ்குன்று - மேருமலை
பலவடுக்கல் - பலவாக அடுக்கப்பட்ட
பவளவளை - பவளத்தானாகிய வளையல்
பற்றாகின்று - இடமாகாநின்றது
பாண்டி - எருது; ஆகுபெயராய் வண்டிக்கு
ஆயிற்று
பாளை - கமுகுதெங்கு முதலியவற்றின் பாளை
பாற்கடல் - திருப்பாற்கடல்
பிணிமுகம் - முருகப்பெருமான் ஏறும் யானை