பிணியிலி - துணையில்லாதாய்
பிறவியை - பிறப்பினையுடையை
புக்கற்று - புகுந்தாற் போன்றது
புணர்த்திய - கூட்டுவித்தற்கு
புணர்ந்தென - கூடினாற் போன்று
புணர்ப்பின் - கூட்டத்தையுடைய
புண்மிசைக்கொடியோன் - கருடக்கொடியை உடைய
திருமால்
புதையிருள் - பொருளை மறைக்குமிருள்
புத்தேளுலகு - தேவருலகம் (ப-தி)
புரிநூலந்தணர் - பார்ப்பனர்
புருவத்து - பூர்வத்தில்; பண்டு
புலக்கோல் - அறிவாகிய தராசு (ப-தி)
புலராமகிழ் - கெடாத மகிழ்ச்சி
புலர்த்தியோய் - உலரச் செய்தோய்
புள்ளிநிலன் - புள்ளியளவிற்றாகிய நிலம்
புள்ளியன்மா - பறவையின் இயல்பினையுடைய
குதிரை
புள்ளொடு பெயரிய பொருப்பு - கிரவுஞ்ச மலை
புனைபுணை - கட்டிய தெப்பம்