பூத்தபுகை - பொலிவுற்ற நறுமணப் புகை
பூந்தாரான் - முருகப்பெருமான்
பூந்துகில் - பூத்தொழிலையுடைய ஆடை
பூரியமாக்கள் - கீழ்மக்கள்
பூவினுட் பிறந்தோன் - பிரமன்
பெட்புறும் - விரும்புகின்ற
பெண்டின் - வழிமுறைக் கிழத்தியாகிய
வள்ளி காரணமாக
பெரும்பக்கம் - வளர்பிறைப் பக்கம்
பேஎவிழவு - வெறியாட்டு விழா
பேணுதும் - போற்றுகின்றேம்
பைங்கண் பார்ப்பான் - சிவபெருமான்
பொதியின் முனிவன் - அகத்தியன்
பொய்தன் மகளிர் - விளையாட்டு மகளிர்
பொய்யாடல் - காமக்குறிப்பில்லாத விளையாட்டு
பொய்யுமல்ல - பொய்மையுடையனவுமல்ல
பொருளியல் பிற்றண்டமிழ் - பொருளிலக்கணமமைந்த
குளிர்ந்த தமிழ்
பொலங்கலம் - பொற்கலம்
பொலஞ்சொரி - பொன்னை வழங்குகின்ற
பொலம்பரப்பும் - பொன்னைப்பரப்புகின்ற
பொலம்புரிசை - பொன்மதில் (ப-தி)
பொலம்புரியாடை - பொன்னாடையுடையோனே
பொழிற்பாயல் - சோலையிடத்துப் படுக்கை