பொன்புனை உடுக்கை - பீதாம்பரம்
பொன்னங்கொம்பு - பொற்கொடி; பெண்
மகாமாதவர் - பெரிய தவத்தையுடையோர்
மடங்கல் - யமனுடைய ஏவலன்; கூற்றம்.
மடநல்லார் - மடப்பமுடைய மகளிர்
மடநோக்கம் - மடப்பமுடைய பார்வை
மடமைத்து - மடமை செய்தலுடைத்து
மடவிரல் - இளைமையுடைய விரல்
மடையர் - அவிப்பொருள் ஏந்தி வருவோர் (ப-தி)
மணத்துவர் - வாசனைப் பாக்கு
மணிமிடற்றண்ணல் - சிவபெருமான்
மண்ணார் - மார்ச்சனை பொருந்திய
மதவலி - மிக்க வலியுடையோனே
மத்தகநித்திலம் - ஒருதலைக் கோலவணி