மயிலியல் - மயில்போன்ற சாயல்
மயில்மேல் ஞாயிறு - முருகன்
மயிற்கொடி - மயில்போன்ற வள்ளியம்மையார்
மருந்துரையிருவர் - அசுவனிதேவர்
மலருண்கண்: அன்மொழித் தொகை
மலர்தரு செல்வம் - பெருகிய செல்வம்
மலர்மார்பு - விரிந்த மார்பு
மலர்மிசை முதல்வன் - பிரமன்
மலிர்கால் - பயின்ற காற்று
மலைமுழக்கு - மலையின் எதிரொலி
மழலை - எழுத்துருவம் பெறாச் சொல்
மறங்கெழு - வீரம் பொருந்திய
மறுகுபட - தம்முள் விரவும்படி
மறுக்கத்துன்பம் - பிறவித்துன்பம்
மறுமிடற்றண்ணல் - சிவபெருமான்
மனக்கோள் - மனத்தே நினைத்தது
மன்குணம் - வீடுபெறுங்குணம்
மன்மகளிர் - அரங்கேறிய தலைக்கோல் மகளிர்
மா - சூரபதுமன் ஆகிய மாமரம்
மாஅன் மருகன் - முருகப்பெருமான்