மாசில்பனுவல் - குற்றமற்ற செய்யுள்
மாணெழில் - மாட்சிமை பொருந்திய அழகு
மாநிலம் - பெரிய பூமி (ப-தி)
மயவவுணர் - மாயஞ்செய்தல் வல்வர்
மாயாமன்ன - அழியாத நிலைபேறுடையோனே
மாயிருந்திங்கள் - முழுத்திங்கள்
மார்பளிப்பாளை - ஏற்றுக்கொள்வாளை
மார்பினவை - மார்பினையுடையை
மாலைக்குமாலை - மாலைதோறும்
மாறெழுந்து - மாறாக எழுந்து
மான்மாலை - மயக்கந்தரு மாலைப் பொழுது
மிச்சில் - எச்சில் (ப-தி)
மீட்சியும் - மீளுமிடத்தும்
முகைப்பருவத்தர் - கன்னியர்
முகைமுல்லை - அரும்பாகிய முல்லை
முடியா நுகர்ச்சி - நுகர்ந்தமையாத புணர்ச்சி