முதல்வியர் - முதுபார்ப்பனிமார்
முதற்புணர்ச்சி - இயற்கைப் புணர்ச்சி (ப-தி)
முதியை - ஆண்டான் மூப்புடையை
முத்தீ - மூன்றுவகைப்பட்ட வேள்வித்தீ
முத்துத்தொடை - முத்துவடம்
முத்துநீர் - முத்துப்போலும் பனி நீர்
முழவுத்தோள் - மத்தளம் போன்ற தோள்
முறுக்குநர் - முறுக்குபவர்
முறைமூட்டி - முறைப்படி மூளச் செய்து
முற்றாக்காதல் - முதிர்ந்துகெடாத காதல்
முற்றாவிரிசுடர் - இளஞாயிறு
முற்றின்று - வளைத்தது (ப-தி)
மூவகை ஆரெயில் - வெள்ளி பொன் இரும்பு
என்னும் மூன்றாலும் இயற்றிய மதில்
மூவா மரபு - மூத்தலில்லாத் தன்மை
மூவிரு கயந்தலை -
ஆறுமென்றலையினையுடையோய்;
முருகனே!
மூவேழுலகம் - ஏழுகூறுபட்ட மூன்றுலகம்
மூன்று - ஓசையும் ஊறும் ஒளியும்
மெய்க் கலவை - உடம்பிற் பூசும் மணக்கலவை
மெய்யாப்பு - சட்டை (ப-தி.)
மெய்யுறு புணர்ச்சி - உடலாற் புணரும் புணர்ச்சி
மென்றகை - மென்மையும் அழகும்
மேலோர் உறையுள் - துறக்கம்
மைஇருநூறு - மையாகிய கரிய துகள்