மைந்துற்றாய் - அறியாமையுற்றாய்
மையாடல் - மையோலை பிடித்தல்
யாக்கையை - உடம்பினையுடையை
யாமத்தன்மை - குறிஞ்சித்தன்மை
யாவர்க்கும் - எத்திறத்தார்க்கும்
யாற்றுநடு - ஆற்றிடைக்குறை; துருகத்தி
வங்கம் - பள்ளியோடம் என்னும் வண்டி
வசித்ததை - துண்டமாக்கியதனை
வச்சியம் - வசியம்; கவர்ச்சியுடைய
வஞ்சி - சேரன் தலைநகர் (ப-தி)
வடிமணி - வடித்த (வார்த்த) மணி
வடுவகிர் - மாவடுவின் பிளப்பு
வட்டிப்போர் - சுழற்றுவோர்
வட்டு - ஒரு விளையாட்டுக் கருவி
வயமொய்ம்பு - வெற்றியுடைய மார்பு
வயவாளை - வலியுடைய வாளைமீன்
வயிரியர் - பாணரும் கூத்தரும்
வரைச்சிறை - மலையையொத்த அணை
வரையகலத்தவன் - மலைபோன்ற
மார்பினையுடைய முருகக் கடவுள்