வரையா கர்ச்சி - களவுப் புணர்ச்சி
வலத்தினது - ஆணையின் கண்ணது
வல்லார் - சூதுப்போர் ஆடுவார்
வழியது - பின்னதாகிய தேய்பிறைப் பக்கம்
வளிபொரு - காற்று மோதா நின்ற
வளிவாங்கு - காற்றாலே வளைக்கப்பட்ட
வள்ளிப்பூ - வள்ளியாகிய தாமரை
வறுங்கை - படைக்கலனில்லாத கை
வாணுதல் - ஒளியுடைய நெற்றி
வாயுமல்ல - வாய்மையுடையனவுமல்ல
வாய்த்தன்று - வாய்புடைத்தாயிற்று
வாய்மையன் - வாய்மையைப் பேணுபவன்
வாரணச் சேவல் - கோழிச்சேவல்
வானியாறு - ஆகாயகங்கை (ப-தி)