Primary tabs
வழுதி என்னும் இவர் பெயரானே இவர் பாண்டி மன்னர்
மரபினிற் றோன்றியவர் என்று உணரலாம். இப் புலவர் பெருமான்
புறநானூற்றிலுள்ள 'உண்டா லம்ம' என்று தொடங்கும் ஒப்பற்ற பாடலை
யாத்தவரும் ஆவர். இவர் மறைவிற்குப் பின்னர் இவரைக் 'கடலுண்
மாய்ந்த இளம்பெருவழுதி' என்று உலகினர் வழங்கினர் என்று
தோன்றுகின்றது. இவ் வடைமொழியானே இவர் தம் மறைவு
மரக்கலத்திற் சென்றபொழுதோ, கடலுள் நீராடிய பொழுதோ
நேர்ந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. இவருடைய சால்புடைமை
நம்மனோரான் அளந்து கூறும் எளிமைத்தன்று. "உண்டால் அம்ம
உலகம் . . . . . தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் உண்மையானே"
என்னும் பாடற்கு இவரே எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றனர்.
3. கடுவன் இளவெயினனார்
இப் புலவர் பெருமான், சமயங் கடந்த சமரச நிலையை
எய்திய
சான்றோர் என்பது இவர் பாடலானே உணரப்படும். இவர், திருமால்
மேலவாகிய 3 ஆம், 4 ஆம் பாடலையும், செவ்வேட்குரிய 5 ஆம்
பாடலையும் இயற்றிய சான்றோர் சமயப்பூசல் சிறிதும் மருவாத தூய
உள்ளம் படைத்தவர். இறையியல்பினை நுண்ணிதின் இவர்
இயற்கையினின்றும், தத்துவங்களானும் நன்கு பற்பல விடங்களிலே
விளக்கியுள்ளனர். இவர் புராணக் கதைகளைப் பெரிதும் தழுவிப்
பாடியுள்ளார்.
4. கரும்பிள்ளைப்பூதனார்
இவர், வையைக்குரிய 10 ஆம் பாடலை இயற்றியவர்
ஆவர்.
இவர், மதுரை மக்கள் வையையின்கண் புதுநீர் வருதல் கண்டு
பொங்கிய உவகையராய் அணிகலன்களாலும் மாலைகளாலும் புனைந்து
கொண்டு,
"புகவரும் பொங்குளைப் புள்ளியன் மாவும்
மிகவரினும் மீதினிய வேழப் பிணவும்
அகவரும் பாண்டியும் அத்திரியும் ஆய்மாச்
சகடமும் தண்டார் சிவிகையும் பண்ணி
வகைவகை யூழுழ் கதழ்பு மூழ்த்து ஏறி"
செல்லும் காட்சியினையும்,
சிற்பப் புலியைக் கண்டு பிடியானை சிதைந்து ஓடுதலையும்,
புதுநீரிற் புக்கு அம் மாந்தர் பலவிதமாக ஆடல் நிகழ்த்துதலையும்,
கைம்மாறு கருதாமல் நல்லறம் பல விரும்பிச் செய்தலை