தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal


யும், பிறவற்றையும் கற்போர்க்குக் கண்கூடாகப் பொருள் புலப்படும்படி
இனிய உவமை பல எடுத்துக்கூறி விளக்கியுள்ளார்.

5. கீரந்தையார்

திருமாலுக்குரிய 2 ஆம் பாடலை இப் புலவர் பெருமான்
இயற்றியருளினார். திருவள்ளுவமாலையில் இவர் பாடிய செய்யுள்
ஒன்றுளது.

உலகம் அறிவுப் பெருவெளியினின்றும் தோன்றி யொடுங்கும்
முறையை இவர் அழகாகப் பாடியுள்ளார். இவர் இறைவனுக்கு
உருவும் உண்டியும் வெளிப்பாடும் கூறும் பகுதி மிகவும் ஆழ்ந்த
கருத்துடையதாம். அது,

"கேள்வியுட் கிளந்த ஆசா னுரையும் படிநிலை
வேள்வியுட் பற்றியாடு கொளலும் புகழியைந் திசைமறை
உறுகனன் மூட்டித் திகழொளி ஒண்சுடர் வளப்பாடு
கொளலும் நின்னுருபுடன் உண்டி பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய அந்தணர் காணும் வரவு"


எனவரும்.

இனி, இவர் இறைவன்பால் வரம் வேண்டுதல் மிகவும்
சிறப்புடையதொரு பகுதியாகும்.

6.குன்றம்பூதனார்

இப் புலவர் பெருமான், செவ்வேட்குரிய 9 ஆம் பாடலையும் 18
ஆம் பாடலையும் இயற்றியருளியவராவர்.

இவர் அயனாலே வீழ்த்தப்பட்ட ஆகாய கங்கையைச்
சிவபெருமான், தமது செஞ்சடைப்பாரத்தை விரித்து உதிர்ந்து விழுமொரு
மலரைத் தாங்கும் அத்துணை எளிதாகத் தாங்கிய தனிப் பெருஞ்
சிறப்புடையோன் என அழகாகக் கூறியுள்ளார்.

இனி, வடமொழியாளர்க்குத் தமிழர்க்கே சிறந்துரிமையுடைய
தள்ளாப் பொருளியல்பினையும், அதன்கண் அகப்பொருள் பற்றிய
களவு கற்பென்னும் கைகோள் இரண்டனுள் களவு சிறந்தவாறும், அத்
தமிழை ஆராய்ந்தமையானே முருகன் சிறந்தவாறும், அக் களவிற்
புணர்ச்சியுடைமையான் வள்ளி சிறந்தவாறும் ஓதும் பகுதி மிகமிக
இன்பந்தருவதாகும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:06:56(இந்திய நேரம்)