தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் (நெய்தற்றத்தனார்)

கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் (நெய்தற்றத்தனார்)
243. பாலை
அவரை ஆய் மலர் உதிர, துவரின
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப,
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக்
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய,
5
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக்
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை!
'நெடிது வந்தனை' என நில்லாது ஏங்கிப்
10
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது
நமக்கே எவ்வம் ஆகின்று;
15
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே!
தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத், தலைமகள் 'ஆற்றேன்' என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 14:55:21(இந்திய நேரம்)