தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செல்லூர் கிழார் மகனார் பெரும் பூதங் கொற்றனார்

செல்லூர் கிழார் மகனார் பெரும் பூதங் கொற்றனார்
250. நெய்தல்
எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப,
மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர,
5
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட,
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி,
தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன்,
வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும்
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு
10
அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய்,
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது, கங்குலானே!
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 14:56:23(இந்திய நேரம்)