தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அவியன்

அவியன்
271. பாலை
பொறி வரிப் புறவின் செங் காற் சேவல்
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி,
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு,
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக்
5
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி,
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப்
பல் காய் அம் சினை அகவும் அத்தம்
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு
10
நிலை அரும் பொருட் பிணி நினைந்தனிர்எனினே,
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே,
களி மலி கள்ளின் நல் தேர் அவியன்
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும்
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
15
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள்,
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்,
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே?
செலவு உணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:22:23(இந்திய நேரம்)