தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அகல் இரு விசும்பகம்

அகல் இரு விசும்பகம்

 

214. முல்லை
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய்,
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம்
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி,
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது;
5
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை,
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை,
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே;
அமரும் நம் வயினதுவே; நமர் என
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி
10
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப்
படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ,
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப,
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை
15
மாரி மாலையும் தமியள் கேட்டே?
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:22:36(இந்திய நேரம்)