தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அரம் போழ் அவ் வளை செறிந்த

அரம் போழ் அவ் வளை செறிந்த

 

349. பாலை
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய,
எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன்
தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி,
5
உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே,
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக,
அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு,
எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள,
10
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை
கல் ஊர் பாம்பின் தோன்றும்
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே?
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:25:13(இந்திய நேரம்)