அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனி பசந்தனள்' என வினவுதி. அதன் திறம்
யானும் தெற்றென உணரேன். மேல் நாள்,
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு,
'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு,
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி,
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ?' என்றனன். பையெனப்
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து,
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச்
சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே.
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன்
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே.
செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு
நின்றது. - தங்கால் முடக் கொற்றனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:29:30(இந்திய நேரம்)