தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உய் தகை இன்றால் தோழி

உய் தகை இன்றால் தோழி

 

341. பாலை
உய் தகை இன்றால் தோழி! பைபய,
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும்
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்;
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக்
5
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்,
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல்,
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு,
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி,
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
10
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன்,
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும்,
யாணர் வேனில்மன், இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே?
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:35:55(இந்திய நேரம்)