தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஏனலும் இறங்கு குரல்

ஏனலும் இறங்கு குரல்

 

132. குறிஞ்சி
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து,
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி
ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின்,
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி,
5
வால் நிணப் புகவின், கானவர் தங்கை
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண்
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின்,
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப!
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக்
10
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள்
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
இருங் கவுட் கடாஅம் கனவும்,
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:48:49(இந்திய நேரம்)