தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விசும்பு உற நிவந்த

விசும்பு உற நிவந்த

 

131. பாலை
'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப்
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன,
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல்
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை
5
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என
வீளை அம்பின் விழுத் தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
10
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந கானம், 'நம்மொடு
வருக' என்னுதிஆயின்,
15
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:52:53(இந்திய நேரம்)