தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கடல்பாடு அவிந்து

கடல்பாடு அவிந்து

 

50. நெய்தல்
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்;
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்;
மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப,
5
பகலும் நம்வயின் அகலானாகிப்
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன்,
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது,
மல்லல் மூதூர் மறையினை சென்று,
10
சொல்லின் எவனோ பாண! 'எல்லி
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என,
கண் நிறை நீர் கொடு கரக்கும்,
ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே.
தோழி பாணனுக்குச் சொல்லியது. - கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:55:20(இந்திய நேரம்)