தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நிலாவின் இலங்கு மணல்

நிலாவின் இலங்கு மணல்

 

200. நெய்தல்
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்,
புலால் அம் சேரி, புல் வேய் குரம்பை,
ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து,
இன்னா உறையுட்டுஆயினும், இன்பம்
5
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள்,
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப!
பொம்மற் படு திரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி,
10
எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற,
நல் தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று,
சேந்தனிர் செல்குவிர்ஆயின், யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம்;
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே.
தலைமகள் குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குக் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:22:04(இந்திய நேரம்)