தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நெஞ்சு உடம்படுதலின்

நெஞ்சு உடம்படுதலின்

 

312. குறிஞ்சி
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி,
இரவின் வரூஉம் இடும்பை நீங்க,
வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து,
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்,
5
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது,
அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப்
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக,
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி!
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
10
இன் இசை முரசின் இரங்கி, ஒன்னார்
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை,
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த
அடு புகழ் எஃகம் போல,
கொடி பட மின்னிப் பாயின்றால், மழையே!
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது; தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -மதுரை மருதன் இளநாகனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:24:23(இந்திய நேரம்)