தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நெடுங் கயிறு வலந்த

நெடுங் கயிறு வலந்த

 

30. நெய்தல்
நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
5
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,
பெருங் களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,
10
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறுங் கானல் வந்து, 'நும்
15
வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே?
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:24:56(இந்திய நேரம்)