தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நெடுங் கொடி நுடங்கும்

நெடுங் கொடி நுடங்கும்

 

196. மருதம்
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து,
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி,
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
5
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
விடியல் வைகறை இடூஉம் ஊர!
தொடுகலம்; குறுக வாரல் தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
10
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய,
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை
அன்னிமிஞிலியின் இயலும்
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:25:17(இந்திய நேரம்)