தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பசை படு பச்சை

பசை படு பச்சை

 

244. முல்லை
'''பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை
பகல் உறை முது மரம் புலம்பப் போகி,
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை
5
கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை
வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு
இனிதுகொல், வாழி தோழி?'' என, தன்
பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப,
10
அருந் துயர் உடையள் இவள்' என விரும்பிப்
பாணன் வந்தனன், தூதே; நீயும்
புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி,
நெடுந் தேர் ஊர்மதி, வலவ!
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை.......மள்ளனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:27:24(இந்திய நேரம்)