தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பனைத் திரள் அன்ன

பனைத் திரள் அன்ன

 

148. குறிஞ்சி
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை,
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின்,
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி;
5
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து;
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட!
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென,
காணிய செல்லாக் கூகை நாணி,
10
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை
பெரிதால் அம்ம இவட்கே; அதனால்
மாலை, வருதல் வேண்டும் சோலை
முளை மேய் பெருங் களிறு வழங்கும்
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே.
பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:28:50(இந்திய நேரம்)