தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெருங் கடல் முகந்த

பெருங் கடல் முகந்த

 

188. குறிஞ்சி
பெருங் கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ!
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ,
போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து
அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர்
5
அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர்
கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
கொன்னே செய்தியோ, அரவம்? பொன் என
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி,
10
பொலிந்த ஆயமொடு காண்தக இயலி,
தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும்,
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்,
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ? வாழிய, மழையே!
இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வீரை வெளியன் தித்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:31:55(இந்திய நேரம்)