தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெருங் கடற் பரப்பில்

பெருங் கடற் பரப்பில்

 

60. நெய்தல்
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க,
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
5
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து,
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய;
'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
10
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக்
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியினும் செறிய
15
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே.
தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற் கீரத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:32:17(இந்திய நேரம்)