தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மலி பெயல் கலித்த

மலி பெயல் கலித்த

 

42. குறிஞ்சி
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்,
தளிர் ஏர் மேனி, மாஅயோயே!
5
நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச,
கோடை நீடிய பைது அறு காலை,
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி,
10
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை,
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்தமாறே
தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- கபிலர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:35:43(இந்திய நேரம்)