தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

யான் எவன் செய்கோ

யான் எவன் செய்கோ

 

67. பாலை
யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன்,
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை,
5
அரம் போழ் நுதிய வாளி அம்பின்,
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார்,
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
10
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர்
கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை,
15
'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு
நிலம் படு மின்மினி போல, பல உடன்
இலங்கு பரல் இமைக்கும்' என்ப நம்
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே!
பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நோய்பாடியார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:40:57(இந்திய நேரம்)