தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உறையூர் இளம்பொன் வாணிகனார்

உறையூர் இளம்பொன் வாணிகனார்
264
பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி,
மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணியொடு,
அணி மயில் பீலி சூட்டி, பெயர் பொறித்து,
இனி நட்டனரே, கல்லும்; கன்றொடு
5
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது,
இன்றும் வரும்கொல், பாணரது கடும்பே?
திணையும் துறையும் அவை.
....................உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 21:58:57(இந்திய நேரம்)