தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி

கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
182
உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதுஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
5
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பாட்டு.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:06:35(இந்திய நேரம்)