பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரதம் பாடிய பெருந்தேவனார்
கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை:
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப:
கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே:
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்:
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீர் அறவு அறியாக் கரகத்து,
தாழ் சடைப் பொலிந்த, அருந் தவத்தோற்கே.
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாடியது.
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:25:01(இந்திய நேரம்)