தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெரும் பதுமனார்

பெரும் பதுமனார்
199
கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவு ஆனாவே, கலி கொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
5
புரவு எதிர்கொள்ளும் பெருஞ் செய் ஆடவர்
உடைமை ஆகும், அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.
திணையும் துறையும் அவை.
பெரும்பதுமனார் பாட்டு.
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:29:22(இந்திய நேரம்)